Cyclone Gaja Fund Raising


Dear Tamil people of Cleveland,
We all aware that cyclone Gaja has affected nearly 40 villages in cauvery delta region, Tamilnadu. Every news we hear every day makes us feel so sorry for not being able to help out.
In order to give everyone an opportunity to show that we care and support our people, NEOTS has decided to organize a fundraiser. We’ll make sure all the funds collected is properly sent for relief activities.
We kindly request you to donate generously and spread this message to your friends in other parts of US too. Let’s give this Thanksgiving a true meaning by giving.
PS: All donations can be used for tax exemption. Neots is happy to provide you the receipt for the same upon request. The detailed report of amount collected and relief measures taken will be submitted with proper proof.

புயல் கஜா நிதி திரட்டல்


அன்பின் தமிழ் சொந்தங்களே,

கஜா புயல் தாக்குதலால் பாதிக்கப் பட்ட காவிரி டெல்டா பகுதி கிராமங்களும் அதில் வாழும் மக்களும் வாழ்வாதாரத்தை கூட இழந்து உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, இரவில் ஒளியின்றி அன்றாடம் அல்லற்படும் செய்தி நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

கடல் கடந்து வாழும் தமிழர்களாகிய நம்மை நமது உடன் பிறப்புகளுக்கு நேரில் சென்று உதவ முடியாத ஏக்கம் குடையத்தான் செய்கிறது. அவர்கள் இந்தத் துயரிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நம்மாலான உதவி செய்ய முன்வந்துள்ளது நமது வடகிழக்கு ஓஹையோ தமிழ்ச் சங்கம். எனவே தமிழ் கூறும் நல்லுள்ளங்கள் தங்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிரவும்.

தாங்கள் அளிக்கும் தொகைக்கு வரிவிலக்கு கோரத் தகுந்த ஆவண நிரூபணங்கள் ஒவ்வொரு நன்கொடையாளருக்கும் விண்ணப்பத்தின் பேரில் வழங்கப்படும். நமது நன்கொடை சீரிய முறையில் உரிய மக்களுக்குச் சென்றடைந்ததற்கான அறிக்கையும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

“உன்னத நோக்கத்திற்காய் ஒன்றுபடுவோம்
உயிர் காத்து வாழ்வு காக்க செயல்படுவோம்”